வ.உ.சி.யின் நூல்களைக் குறைந்த விலை பதிப்பாக வெளியிடும் தமிழக அரசின் முயற்சியை டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
"வ.உ.சிதம்பரனார் எழுத்துகள் வ.உ.சி. நூல் களஞ்சியமாகத் தொகுக்கப்பட்டு, அவரது 150ஆம் பிறந்த ஆண்டான இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் குறைந்த விலையில் வெளியிடப்படுகிறது.
முதல் கட்டமாக வ.உ.சிதம்பரனார் எழுதி வெளிவராத படைப்புகள் மற்றும் அச்சில் இல்லாத படைப்புகளைத் தொகுத்து, ‘வ.உ.சி பன்னூல் திரட்டு’ எனும் தலைப்பிலும், இரண்டாம் தொகுதி ‘வ.உ.சி திருக்குறள் உரை’ எனும் தலைப்பிலும் இரண்டு தொகுதிகள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வீரர் தமிழறிஞர் வ.உ.சி.யின் எழுத்துகள், சிந்தனைகள் இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டும். தமிழக அரசின் இந்த முயற்சிகளைப் பாராட்டுகின்றேன்."
இவ்வாறு பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.