கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

நவ.22-ம் தேதி சென்னையில் எங்கு ஒரு நாள் மின் தடை?- மின்வாரியம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் நவ.22-ம் தேதி ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"சென்னையில் 22.11.2021 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சோழிங்கநல்லூர் பகுதி; பரமேஸ்வரன் நகர், நாராயணசாமி நகர், பாலாஜி நகர், சத்தியவாணி முத்து தெரு, டி.என்.எச்.பி, பாரதி நகர், படவேட்டம்மன் கோயில், எச்.டி இன்போசிஸ் ஓஎம்ஆர், பாலாண்டி அம்மன் கோயில், தர்மராஜா கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தப்படும்."

இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT