கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; 22-ம் தேதி முதல் விருப்ப மனு வழங்கலாம்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத் தலைவர்களிடம் விருப்ப மனுக்களை கொடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவுறுத்தியுள்ளனர்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

"நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ள உள்ளது.

இதில் போட்டியிட விரும்பம் உள்ளவர்கள் தங்களின் விருப்ப மனுவை அவரவர் சார்ந்த தமாகா-வின் மாவட்ட தலைவரிடம் வருகின்ற 22.11.2021 திங்கள் கிழமை முதல் 26.11.2021 வெள்ளிக் கிழமைக்குள் கொடுக்க வேண்டும்.

விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட தலைவர்கள் வருகின்ற 28.11.2021 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற இருக்கும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தன்னிடம் நேரில் கொடுக்க வேண்டும்".

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT