கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

தொடர் மழை : சென்னையில் எந்தெந்த விரைவு ரயில்கள் ரத்து?

செய்திப்பிரிவு

தொடர் கனமழை காரணமாக சென்னையில் இருந்து இன்று புறப்பட இருந்த சில விரைவு ரயில்kளை ரத்து செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

" ரேணிகுண்டா - புடி பகுதி இருப்புப் பாதையில் மழை நீர் தேங்கி இருப்பதன் காரணமாக, ராசாம்பேட்டை மற்றும் நந்தலூர் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாலும் கீழ்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, நவம்பர் 20, 2021 அன்று டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.30 மணி அளவில் திருப்பதி புறப்படும் ரயில் எண். 16203 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருப்பதி டெய்லி எக்ஸ்பிரஸ் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6.45 மணிக்கு திருப்பதி புறப்படும் ரயில் எண். 16204 திருப்பதி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது”.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT