கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: புதுச்சேரி, காரைக்காலில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை

செ. ஞானபிரகாஷ்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை கரையை கடக்க உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னை புதுச்சேரிக்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் கடல் சீற்றமாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மீனவர்கள் அனைவரும் தங்களது விசை படகுகளை துறைமுகங்களில் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT