ஒரு நிமிட வாசிப்பு

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நகர்ந்து வருகிறது.

தற்போது சென்னையிலிருந்து 340 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும். புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT