ஒப்பிட முடியாத வீரப்பெருமகனாகத் திகழ்ந்தவர் வ.உ.சிதம்பரனார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 85-வது நினைவு நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புப்படி, தமிழக அரசு சார்பில் தியாகத் திருநாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், "கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல், தியாகச் சீலர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம் இன்று!
ஆங்கிலேயரின் அடக்குமுறைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு, நாட்டின் விடுதலைக்காகச் சொத்து, சுகங்களை இழந்து, ஒப்பிட முடியாத வீரப்பெருமகனாகத் திகழ்ந்த வ.உ.சிதம்பரனாரை வணங்கிப் போற்றிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.