ஒரு நிமிட வாசிப்பு

தருமபுரியில் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை: 9-ம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலான மாணவர்கள் வருகை

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதர வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகை தந்தனர்.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நேற்று (11.11.21) மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் (12.11.21) தருமபுரி மாவட்டத்தில் மிதமான அடைமழை தொடர்ந்து வருகிறது.

எனவே, தொடக்க நிலை வகுப்புகள் முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி விடுமுறை அறிவித்துள்ளார். இதர வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகை தந்தனர்.

SCROLL FOR NEXT