பிரதிநிதித்துவப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தனர்.

நடப்பாண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தீபத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கரோனா தாக்கம் குறைந்து வரும் நேரத்தில் பக்தர்கள் வருகையால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்பதால் பக்தர்கள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இன்னும் சில தினங்களில் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உடன் இருந்தார்.

இருவரும் விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிவாச்சாரியர்களிடம் கேட்டறிந்தனர்.

SCROLL FOR NEXT