கோப்புப்படம் 
ஒரு நிமிட வாசிப்பு

சேலத்தில் சோகம்: மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் பலி

செய்திப்பிரிவு

சேலத்தில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் கனமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கெங்கவல்லி அருகே உள்ள ஆனையம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்கொடி, அலமேலு ஆகிய இருவர் இன்று விளைநிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக இருவரையும் திடீரென மின்னல் தாக்கியது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT