அரியலூர் அண்ணா சிலை அருகே கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று (அக். 26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலையைக் குறைக்க வேண்டும், இல்லையெனில் வெளிநாடுகளிலிருந்து சிமென்ட்டை இறக்குமதி செய்யவேண்டும், தமிழகத்தில் மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மண்டலத் தலைவர் மார்டின் தலைமை வகித்தார். சங்கப் பொறுப்பாளர்கள் பழனிவேலு, அன்பழகன், அறிவானந்தம் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.