ஆரோக்கிய ஜூடு ரெக்ஸ் 
ஒரு நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை அருகே விபத்தில் திமுக நிர்வாகி உட்பட 2 பேர் உயிரிழப்பு; இருவர் படுகாயம் 

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை அருகே கீரனூரில் ஏற்பட்ட விபத்தில் திமுக நிர்வாகி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பெரிய சூரியூரைச் சேர்ந்தவர் காமராஜ் (42). கீரனூர் திடீர் நகரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி போதும்பொண்ணு (42). கட்டிடத் தொழிலாளர்களான இவர்கள் இருவரும், நேற்று (அக்.16) இரவு பணி முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கீரனூர் அய்யப்பன் கோயில் அருகே சென்றபோது, இந்த மோட்டார் சைக்கிளும் கீரனூரைச் சேர்ந்த சிமியோன் மகன் ஆரோக்கிய ஜூடு ரெக்ஸ் (25), ஜெகநாதன் மகன் அமர்நாத் (22) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

இதில், ஆரோக்கிய ஜூடு ரெக்ஸ், காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த காமராஜ், போதும்பொண்ணு ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆரோக்கிய ரெக்ஸ் ஜூடு, கீரனூர் நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT