நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.
நெல்லை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமலை நம்பி கோயில் அமைந்துள்ளது . வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்யத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று முதல் பக்தர்கள் திருமலை நம்பி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் கடைசி புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு தரிசனம் செய்ய இன்று வந்தனர். பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர், காவலர்கள் உதவியுடன் பக்தர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்