ஒரு நிமிட வாசிப்பு

கரோனா விழிப்புணர்வுகாக இருசக்கர வாகனப் பயணம்

வீ.தமிழன்பன்

கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் இருசக்கர வாகனப் பயணம் மேற்கொண்ட இருவர் இன்று காரைக்கால் வந்தடைந்தனர்.

அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கலைமாமணி பழனியாபிள்ளை, கிராமியப் பாடகர் ராஜேந்திரன் ஆகியோர் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் 15-ம் தேதி பயணத்தைத் தொடங்கிய இவர்கள் இன்று (அக்.7) காரைக்கால் வந்தடைந்தனர். புதுச்சேரியிலிருந்து கடலூர், சிதம்பரம் வழியாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தை வந்தடைந்த அவர்களை ஆட்சியர் அர்ஜுன் சர்மா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து காரைக்காலிலிருந்து நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் வழியாக கன்னியாகுமரிக்கு தங்களது இருசக்கர விழிப்புணர்வு வாகனப் பயணத்தைத் தொடங்கினர். இந்த வாகனப் பயணத்தை ஆட்சியர் அர்ஜுன் சர்மா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்டத் துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன் உடனிருந்தார்.

வரும் 17-ம் தேதி இந்தப் பயணம் நிறைவடைவதாக அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT