ஒரு நிமிட வாசிப்பு

2020ஆம் ஆண்டில் அதிக அளவில் கொல்லப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

செய்திப்பிரிவு

கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதிலும் 227 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான க்ளோபல் விட்னஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து க்ளோபல் விட்னஸ் வெளியிட்ட அறிக்கையில், “2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 227 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் மரம் வெட்டுதல், சுரங்கம், பெரிய அளவிலான வேளாண் வணிகம், நீர் மின் அணைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள்.

பெரும்பாலான கொலைகள் பிரேசில், சிலி, பிலிப்பைன்ஸ், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ளன. கொலம்பியாவில் கடந்த ஆண்டில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பல சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT