பாகிஸ்தான் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சைக்கிள் பேரணியாக வந்த விமானப் படை வீரர்களுக்கு சிதம்பரத்தில் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் வரவேற்பளித்தார். 
ஒரு நிமிட வாசிப்பு

பாக். போரில் வெற்றி; 50 ஆண்டு நிறைவு: சைக்கிள் பேரணியாக வந்த விமானப் படை வீரர்களுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு

க.ரமேஷ்

பாகிஸ்தான் உடனான போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்திய விமானப் படையினர் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர். விமானப் படை வீரர்களுக்கு சிதம்பரத்தில் டிஎஸ்பி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டு நிறைவடைந்தது. இதைக் கொண்டாடும் வகையில் இந்திய விமானப் படை வீரர்கள் 16 பேர் கொண்ட குழுவினர், கமாண்டர்கள் நித்தின் உபாத்யா, சைலேந்திர சிங் ஆகியோர் தலைமையில் நேற்று தஞ்சாவூரில் இருந்து சைக்கிள் பேரணியாகப் புறப்பட்டனர். விமானப் படை வீரர்களின் இந்த சைக்கிள் பேரணி இன்று (செப்.11) சிதம்பரம் வந்தடைந்தது.

அப்போது அவர்களுக்குக் காவல்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில் போலீஸார் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரர்களின் பேரணியைப் பாராட்டி அவர்களுக்கு டிஎஸ்பி ரமேஷ்ராஜ் நினைவுப் பரிசு வழங்கினார். ஆய்வாளர்கள் சிதம்பரம் ஆறுமுகம், அண்ணாமலை நகர் குணபாலன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர். விமானப் படை வீரர்கள் மாமல்லபுரம் வரை சைக்கிளிலேயே செல்ல உள்ளனர்.

பின்னர் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் கூறுகையில், ’’1971-ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டு நிறைவு பெற்றது. அதைக் கொண்டாடும் வகையில் இந்திய விமானப்படை வீரர்கள் தஞ்சாவூரில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில் பேரணியாகச் சென்று மீண்டும் தஞ்சாவூர் என சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் செல்கின்றனர். அவர்களுக்கு சிதம்பரம் போலீஸார் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT