ஒரு நிமிட வாசிப்பு

ரைஸ் மில்லில் பதுக்கிய 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது

இ.மணிகண்டன்

விருதுநகர் அருகே ரைஸ் மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 டன் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரைஸ் மில் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகர் மல்லாங்கிணர் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.மனோகருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து தனிப்படை எஸ்.ஐ. கௌதம் விஜய் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 319 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 டன் ரேஷன் அரிசி, 165 மூட்டைகளில் இருந்து பாலீஷ் செய்யப்பட்ட 8 டன் ரேஷன் அரிசி, மற்றும் 29 மூட்டைகளில் இருந்த 2 டன் கோதுமை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக ரைஸ் மில் உரிமையாளர் கண்ணன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT