தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.