தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை (செப். 03) நிலவரப்படி விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று (செப். 04) காலை 6 மணி அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் மற்றும் தமிழகத்தை நோக்கி வரும் காவிரி ஆற்றின் ஓரங்களில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை ஆகியவற்றால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.