ஒரு நிமிட வாசிப்பு

திருச்சி ஆட்சியர் சென்ற கார் சேலத்தில் விபத்து

எஸ்.விஜயகுமார்

திருச்சி ஆட்சியர் சென்ற கார் சேலத்தில் விபத்துக்குள்ளானது.

சேலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துவிட்டு திருச்சி திரும்பிக் கொண்டிருந்த திருச்சி ஆட்சியர் சிவராசுவின் கார் சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்துள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியில் விபத்தில் சிக்கியது.

இதில் லேசான காயமடைந்த திருச்சி ஆட்சியர் சிவராசு வேறொரு காரில் அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து குறித்து சேலம் அன்னதானப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் அண்மையில் மாநில அளவில் சிறந்த தேர்தல் அதிகாரி விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT