துருக்கியில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் சிக்கி 48 பேர் பலியாகினர்.
இதுகுறித்து துருக்கி தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில், “ துருக்கியின் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் இதுவரை 48 பேர் பலியாகி உள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. பல வீடுகள் வெள்ளத்தில் கடும் சேதம் அடைந்துள்ளது. பல சாலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளத்தில் மாயமானவர்களை தேடும் பணி விரைவாக நடந்து வருகிறது” என்ற் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் கனமழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் பூமி வெப்பமடைந்தலை தடுக்க உலக நாடுகள் விரைந்து செயல்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.