திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக இன்று(13-ம் தேதி) ஏற்றப்பட்ட தேசிய கொடி. 
ஒரு நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தேசிய கொடி ஏற்றம்  

இரா.தினேஷ் குமார்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13-ம் தேதி) புதிய தேசிய கொடி ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியை தினசரி காலையில் ஏற்றப்பட்டு, மாலையில் இறக்கப்படுகிறது. இந்திய மக்கள் அனைவராலும் மதித்து வணங்கக்கூடிய தேசிய கொடியை, அதன் கம்பத்தில் சரியாக ஏற்றி பட்டொளி வீசி பறக்கவிட வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (12-ம் தேதி) தேசிய கொடியின் சில பகுதிகள் சேதமடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தேசிய கொடியை சரியாக கட்டாததால், அதன் முடிச்சு அவிழ்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கம்பத்தில் நேற்று (12-ம் தேதி) சரியாக ஏற்றப்படாமல் அவமதிக்கப்பட்ட தேசிய கொடி.

இதுகுறித்து புகைப்படத்துடன் ‘இந்து தமிழ் திசை’ இன்று (13-ம் தேதி) செய்தி வெளியிட்டிருந்தது. அதன் எதிரொலியாக, ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(13-ம் தேதி) புதிய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT