புதுச்சேரி, தெலங்கானா வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று ஆளுநர் தமிழிசையிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி தந்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை, தெலங்கானா ஆளுநராகவும் உள்ளார். தற்போது டெல்லி சென்றுள்ள அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் ஆளுநர் தமிழிசை இன்று சந்தித்தார். சந்திப்பின்போது தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உறுதுணையாகச் செயல்படும் என்று ஆளுநர் தமிழிசையிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி தந்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.