காரைக்காலில் பாஜக ஓபிசி அணி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோர். 
ஒரு நிமிட வாசிப்பு

ஓபிசி இட ஒதுக்கீடு: பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கையெழுத்து இயக்கம்

வீ.தமிழன்பன்

காரைக்காலில் பாஜக சார்பில் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று (ஆக.11) கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

காரைக்கால் பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணித் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஓபிசி அணி புதுச்சேரி மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். பாஜக மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பலரும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கையெழுத்திட்டனர். பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

SCROLL FOR NEXT