ஒரு நிமிட வாசிப்பு

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு

வி.சுந்தர்ராஜ்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று அதற்கான விருதும் பரிசுத் தொகையும் தமிழக முதல்வரால் வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தஞ்சாவூர் மாநகராட்சி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும், நீர் மேலாண்மையை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை பாராட்டி நகர்புற வளர்ச்சி துறை சார்பில், தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, சென்னையில் மாநகராட்சி ஆணையரிடம் சிறந்த மாநகராட்சிக்கான விருது 25 லட்சத்துக்கான பரிசுத் தொகைக்கான காசோலை வழங்க உள்ளார்.

SCROLL FOR NEXT