ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று தந்த தினம் தேசிய ஈட்டு எறிதல் தினமாக கொண்டாடப்படும் என்று இந்திய தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா எட்டி ஏறிதலில் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியர்களின் நாயகனாக மாறிய நிரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகளும், பரிசுத் தொகையும் குவிந்து வருகின்றது.
இந்த நிலையில் நிரஜ் சோப்ரவை கவுரவிக்கும் வகையில், அறிவிப்பு ஒன்றை தடகள அமைப்பின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தடகள கூட்டமைப்பின் இயக்குனர் லலித் பனோத் கூறும்போது, “டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு நிரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் பெற்று தந்த தினமான அகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய ஈட்டி எறிதல் தினமாக அடுத்த ஆண்டுமுதல் கொண்டாடப்படும். மேலும், அனைத்து மாநிலங்களிலும் ஈட்டி எறிதல் போட்டி மாநில அளவில் நடத்தப்படும். மேலும் மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படும்.” என்றார்.