உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
முன்னதாக, பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில், அவரது மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
சாலமன் பாப்பையா பட்டிமன்றங்களில் தனது பேச்சாற்றலால் பாரதி பாஸ்கர் பிரபலமடைந்தார். மற்றொரு பேச்சாளரான ராஜாவும், பாரதி பாஸ்கரும் இணைந்து பங்கேற்கும் பட்டிமன்றங்கள் பட்டிமன்ற பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
பாரதி பாஸ்கர் விரைவில் நலம் பெற்று வரவேண்டும் என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக பாரதி பாஸ்கர் நலம் பெற வாழ்த்தி வருகின்றனர்.