அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால், ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால், ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறையில் ஏராளமான தவறுகள் நடந்துள்ளன. குடிநீர், மின் கட்டண பாக்கி ரூ.1,743 கோடி. மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களில் மின்துறைக்கு சுமார் ரூ.1,200 கோடி கட்டணம் செலுத்தவில்லை" என்று தெரிவித்தார்.
இதுதவிர, மின்துறை, போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகள், தமிழக அரசின் கடன் சுமை, ஜிஎஸ்டி வரியில் மத்திய அரசு தர வேண்டிய பாக்கி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்தும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.