மனிதர்களை போல் பற்களை கொண்ட மீன் ஒன்று வடக்கு கரோலினாவில் மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ இந்தவகை மீன்கள் ஆங்கிலத்தில் ஷிப்ஷிட் மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆட்டின் தாடை பற்களை ஒத்து இருப்பதால் இந்த வகை மீன்கள் ஷிப்ஷிட் மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளன.
அம்மீனை கண்டெடுத்த வடக்கு கரோலினா மீனவர்கள் கூறும்போது, இவ்வகை மீன்கள் நன்கு சண்டையிடும். இவற்றின் சுவையும் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்மீனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
பற்களை கொண்ட இந்தவகை தடித்த மீன்கள் வடக்கு மற்றும் தெற்கு கரோனாலினா கடற்கரைகளில் காணக்கிடக்கின்றன. இந்தவகை மீன்கள் சுமார் 10 - 20 அங்குலம் வளரக் கூடியது.