ஒரு நிமிட வாசிப்பு

பதக்கத்தைவிடப் பெரிதான ஒன்றை வென்றுள்ளோம்: ஹாக்கி மகளிர் அணி பயிற்சியாளர் உருக்கம்

செய்திப்பிரிவு

பதக்கத்தைவிடப் பெரிதான ஒன்றை வென்றிருக்கிறோம் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஸ்ஜேர்ட் மரிஜ்னே தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி 3-4 என்ற கணக்கில் பிரிட்டன் அணியிடம் போராடி, தோல்வியைத் தழுவியது.

தோல்வி அடைந்தாலும் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து ஸ்ஜேர்ட் மரிஜ்னே தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் பதக்கத்தைப் பெறவில்லை. ஆனால், அதைவிடப் பெரிதான ஒன்றை நாங்கள் வென்றிருப்பதாக நினைக்கிறேன். நீங்கள் கடினமாக உழைத்தால் உங்கள் கனவுகள் நனவாகும் என்று லட்சக்கணக்கான சிறுமிகளை ஊக்கப்படுத்தியுள்ளோம். நாங்கள் இந்தியர்களைப் பெருமையடையச் செய்துள்ளோம். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT