ஒரு நிமிட வாசிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை முக்கியக் கோப்புகளுக்கு ஒப்புதல்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி பழங்குடியின மக்களை புதுச்சேரி ஆதி-திராவிடர் மேம்பாட்டுக் கழகத்தின் (PADCO) வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக அதன் பெயரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகம் (PADSTDCO) என்று பெயர் மாற்றம் செய்ய துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை முக்கியக் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின்கீழ் சலுகைகள் வழங்க, பழங்குடியின மக்களை புதுச்சேரி ஆதி-திராவிடர் மேம்பாட்டுக் கழகத்தின் (PADCO) வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக அதன் பெயரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகம் (PADSTDCO) என்று பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு ஜூலை மாதத்திற்கான முதியோர் ஓய்வூதியம் வழங்க ரூ. 39.73 கோடிக்கு ஒப்புதல் தந்துள்ளார்.

1. மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி.

2. அன்னை தெரசா சுகாதார பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி.

3. பெருந்தலைவர் காமராசர் மருத்துவக் கல்லூரி.

ஆகிய சுகாதார கல்வி நிறுவனங்களுக்கு முதலமைச்சரைத் தலைவராகவும், தலைமைச் செயலாளரைத் துணைத் தலைவராகவும் நியமிக்க ஒப்புதல் தந்துள்ளார்.

SCROLL FOR NEXT