இஸ்ரேல் மீது லெபனான் புரட்சிப் படைகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் இந்தத் திடீர் தாக்குதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "லெபனான் நாடு இஸ்ரேல் மீது மூன்று ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒன்று இஸ்ரேல் எல்லைக்கு மிக அருகிலும், இரண்டு ராக்கெட் குண்டுகள் இஸ்ரேல் எல்லைக்குள்ளும் விழுந்தன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ராணுவமும் பீரங்கிக் குண்டுகளை வீசி லெபனான் மீது தாக்குதல் நடத்தியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா கொரில்லா படைகளுக்கு எதிராகப் போர் நடத்தியது. ஹிஸ்புல்லா கொரில்லா படைகள் வடக்கு லெபனானில் இஸ்ரேல் எல்லையை ஒட்டி ஆதிக்கம் செலுத்திவந்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின் இத்தீவிரவாத கும்பல் அடங்கியது. இருப்பினும், இந்த கொரில்லா படையின் சிறு கும்பல் அவ்வப்போது இஸ்ரேலுக்கு சிறிய அளவில் இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த ஜூலை 20 ஆம் தேதியும் தாக்குதல் நடத்தியது. தற்போது மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
லெபனான் எல்லையை ஒட்டிய கிர்யாத் ஷ்மோனா பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடந்தவுடேனேயே அப்பகுதியில் ராக்கெட் தாக்குதல் எச்சரிக்கை மணி ஒலிக்கச் செய்யப்பட்டது. இதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். இந்தச் சம்பவத்தால்
எல்லையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.