கோப்புப் படம். 
ஒரு நிமிட வாசிப்பு

உத்தவ் தாக்கரேவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளில் அவர் நீண்டகாலம் நலமுடனும் வெற்றியுடனும் திகழ எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் இளைய மகன். கடந்த 2019 நவம்பர் மாதம் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.

இந்நிலையில் தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மகாராஷ்டிரா முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்க வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT