90 வயதில் எனது தாயார் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் ஆகவே மக்கள் அனைவரும் துணிச்சலாக முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக இன்று மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.
அவர் பேசியதாவது:
"நான் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளேன். எனது தாயார் ஹீராபென் 100 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசி போட்டால் லேசாக காய்ச்சல் வரும். அதுவும் சில மணி நேரங்களுக்குத் தான். தடுப்பூசியால் உயிரிழந்தவர்கள் யாருமில்லை. எனவே, பொதுமக்கள் அனைவருமே தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்" என்று கூறினார்.
மேலும், நாட்டிலிருந்து இன்னும் கரோனா வைரஸ் இன்னும் போகவில்லை. ஆதலால், வருகின்ற பண்டிகை நாட்களில் மக்கள் சமூக விலகல், முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மறக்காமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.