புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே விளையாட்டுத் துறை அமைச்சரும், ஸ்ரீரங்கம் எம்எல்ஏவும் இன்று (ஜூலை 24) கிரிக்கெட் விளையாடினர்.
செரியலூர் இனாமில் இளைஞர்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று போட்டி நடத்தப்பட்டது.
இதில், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர்.
இதை, மாநில சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு, இளைஞர்களை ஊக்கப்படுத்தினார். மைதானத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்.
பின்னர், அமைச்சர் மெய்யநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி இருவரும் மாறி மாறி பந்து வீசி, பேட்டிங் செய்து அசத்தினர். கிரிக்கெட் விளையாடிய இருவரையும் இளைஞர்கள் உற்சாகப்படுத்தினர்.