தடுப்பூசி இறக்குமதி செய்வது குறித்து பல்வேறு நாடுகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேசும்போது, "நமது தடுப்பூசித் திட்டம் சீரான வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாட்டிலிருந்தும் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் இது நடைபெறும் என நம்புகிறோம். தடுப்பூசி இறக்குமதி சாத்தியாமானால் அது தேசத்தில் கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார இழப்பிலிருந்து மீண்டு வர துணையாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.
இந்தியர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு பல்வேறு நாடுகளிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்" என்று கூறினார்.