பிரான்ஸில் டெல்டா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருவதாக பிரான்ஸ் பிரதமர் ஜின் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் ஜின் கேஸ்டெக்ஸ் கூறும்போது, “ நாம் நான்காவது அலையில் இருக்கிறோம். தற்போது டெல்டா வைரஸ் ஆதிக்கத்தை செலுத்து வருகிறது.இது அதிக தொற்றுத்தன்மை கொண்டது. கரோனா தொற்றை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை வகுப்பதற்கு அமைச்சர்கள் குழு இந்த வாரம் கூட இருக்கிறது. தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
பிரான்ஸில் இதுவரை 58 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.