சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிப்பு. 
ஒரு நிமிட வாசிப்பு

சிவாஜி கணேசன் நினைவு தினம்: தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனுசரிப்பு

செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக, சிவாஜி கணேசனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

'நடிகர் திலகம்' சிவாஜி கணேசனின் 20ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை, அடையாற்றில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில், இன்று (ஜூலை 21) காலை 10 மணிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவுத் தலைவரும், சிவாஜி சமூக நலப்பேரவைத் தலைவருமான கே.சந்திரசேகரன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், 'நடிகர் திலகம்' சிவாஜி உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன், மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT