சிவகங்கையில் போலீஸ் பாதுகாப்புடன் கோயில் நாடக மேடையை அகற்றிய நகராட்சி அதிகாரிகள். 
ஒரு நிமிட வாசிப்பு

சிவகங்கை அருகே போலீஸ் பாதுகாப்புடன் கோயில் நாடக மேடை அகற்றம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை அருகே கோயில் நாடக மேடையை அகற்ற எதிர்ப்பு எழுந்ததால், போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

சிவகங்கை தர்மர் கோயில் தெரு திரெளபதி அம்மன் கோயில் முன்பாக, 1998-ம் ஆண்டு நாடக மேடை அமைக்கப்பட்டது. தற்போது நாடக மேடை எதிரேயுள்ள காலியிடம் தனியாருக்கு சொந்தம் என்பதால், சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. இதனால் நாடக மேடை மட்டும் உள்ளது.

இந்த மேடை குடியிருப்புப் பகுதிகளுக்கு செல்ல இடையூறாக இருந்தது. மேடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, மேடையை அகற்ற நகராட்சி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், மற்றொரு தரப்பினர் நடக மேடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று (ஜூலை 19) மேடையை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

SCROLL FOR NEXT