அண்ணாமலை: கோப்புப்படம் 
ஒரு நிமிட வாசிப்பு

திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்களில் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை: அண்ணாமலை விமர்சனம்

செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்களில் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, இன்று (ஜூலை 16) கமலாலயத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், "சட்டப்பேரவையில் நயினார் நாகேந்திரன் சிங்கம் போல குரல் கொடுக்கிறார். அவர்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து, கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் என்பது என் பணிவான ஆசை. மாநில, மத்திய தலைமையின் விருப்பமும் அதுதான்.

திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்கள் இன்றுடன் முடிகிறது. 70 நாட்கள் இந்த ஆட்சியை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். குற்றம் சொல்லியே அரசியல் நடத்த முடியும் என்பதைக் காண்பித்த திமுக, 70 நாட்களில் ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT