ஒரு நிமிட வாசிப்பு

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி: தஞ்சாவூரில் விவசாயிகள் உண்ணாவிரதம்

வி.சுந்தர்ராஜ்

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

கர்நாடக மாநிலம், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. ராசிமணலில் அணை கட்டத் தமிழகத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டும். குறுவை பயிரைக் காப்பாற்ற, சம்பா சாகுபடியைத் தொடங்க உரிய தண்ணீரைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அணைகளின் நீர் நிர்வாகத்தைக் காவிரி மேலாண்மை ஆணையம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், விவசாயச் சங்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT