கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை ஐரோப்பிய நாடுகள் அனுமதித்து வருகின்றன. அந்தவகையில் ஜெர்மனியும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி கீழ்க்கண்ட தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் ஜெர்மனிக்குச் சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஜெர்மனி அனுமதித்துள்ள தடுப்பூசிகள் விவரம்:
* பைஸர்
* மாடர்னா
* ஜான்சன் & ஜான்சன்
* கோவிஷீல்ட்
ஜெர்மனியில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 4-வது அலையை நோக்கி நாடு செல்வதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஜெர்மனியர்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படாது என அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்தது சர்ச்சையானது.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது.
அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.