ஒரு நிமிட வாசிப்பு

அர்ஜெண்டினாவில் அதிகரிக்கும் கரோனா

செய்திப்பிரிவு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அர்ஜெண்டினா சுகாதாரத் துறை தரப்பில், “அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,023 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 46 லட்சமாக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது.

அர்ஜெண்டினாவில் இதுவரை 2.8 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோ போன்ற நாடுகள் கரோனா தொற்றால் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது.

அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT