கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்ட புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா. 
ஒரு நிமிட வாசிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார்

வீ.தமிழன்பன்

காரைக்கால் மாவட்டத்தில் 3 நாட்கள் நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று (ஜூலை 10) தொடங்கி வைத்தார்.

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் காரைக்கால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஜூலை 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், மாவட்டத்தில் உள்ள 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட வழக்கமாகத் தடுப்பூசி போடப்படும் 13 மையங்களிலும், இவை அல்லாமல் கூடுதலாக 14 மையங்களிலும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கூடுதலாக அமைக்கப்படும் 14 மையங்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்படுகின்றன.

கோட்டுச்சேரி அண்ணா நகரில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு, தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் உள்ளிட்டோர் உடன் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் 18 முதல் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

SCROLL FOR NEXT