படம் உதவி: ஏஎஃப்பி 
ஒரு நிமிட வாசிப்பு

வங்கதேசத் தொழிற்சாலையில் தீ விபத்து: 52 பேர் பலி

செய்திப்பிரிவு

வங்கதேசத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “வங்கதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள ஆறடுக்கு மாடி தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்த பட்டாசுகள் மற்றும் வேதியியல் பொருட்கள் காரணமாகத் தீ அதிக அளவில் பரவியது.

இதன் காரணமாகத் தீயிலிருந்து தப்பிக்க தொழிலாளர்கள் கட்டிடத்திலிருந்து குதித்தனர். இதன் காரணமாகப் பலர் காயமடைந்தனர். இந்த தீ விபத்தில் இதுவரை 52 பேர் பலியாகினர். கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று செய்தி வெளியானது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வங்கதேசத்தில் சமீபத்தில் அதிகப் பேரை பலிகொண்ட தீ விபத்தாக இது கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT