ஒரு நிமிட வாசிப்பு

வருசநாடு அருகே கரடி தாக்கி ஒருவர் காயம்

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம் கிழவன்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(39). இவரது உறவினர்கள் தேனி மாவட்டம் வருசநாடு அருகே பாலசுப்பிரமணியபுரத்தில் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது தந்தை பாண்டி உயிரிழந்ததால் இங்கு வந்திருந்தார்.

இறுதிக்காரியங்களை முடித்துவிட்டு நேற்று மாலை மலைப்பாதைவழியே ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புதரில் இருந்த கரடி இவரைத் தாக்கியது.

இதில் தலை, கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகளில் பலத்த ரத்தகாயம் ஏற்பட்டது. உடன் வந்தவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வருசநாடு வனத்துறை மற்றும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT