இடுக்கி மற்றும் பெரியாறு அணை பகுதிகளில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது..
தேனி மாவட்டம் அருகே உள்ளது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இடி,மின்னலுடன் மழை பெய்த போது இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இடுக்கி, வல்லக்கடவு, வண்டிப்பெரியார், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளில் கதவு, ஜன்னல்கள் அதிர்ந்தன.
இடுக்கி அணையில் நில அதிர்வை கணக்கிடும் சீஸ்மோகிராபி என்ற கருவியில் 2.5 ரிக்டர் அளவில் அதிர்வுகள் பதிவாகி உள்ளது. இதேபோல் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியிலும் இலேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது என்று அணைப் பொறியாளர்கள் தெரிவித்தனர்.
நிலஅதிர்வின் போது பலத்த இடி,மின்னல் இருந்ததால் இதை உணர முடியாத நிலை ஏற்பட்டது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.