கோவை மதுக்கரையை அடுத்த சின்னாம்பதி பழங்குடியின கிராமத்தில் கரோனா காலத்தில் குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் சந்தியாவுக்கு இன்று புத்தகத்தை பரிசளித்த மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன். 
ஒரு நிமிட வாசிப்பு

தனது கிராம குழந்தைகளுக்கு வீட்டில் கல்வி பயிற்றுவிக்கும் பழங்குடியின பெண்: கோவை ஆட்சியர் நேரில் வாழ்த்து

க.சக்திவேல்

கோவையில் கரோனா காலத்தில் தனது கிராம குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவித்துவரும் பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று (ஜூன் 27) நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மதுக்கரை வட்டம் சின்னாம்பதி பழங்குடியின குடியிருப்பில் கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சண்முகம் என்பவரது மகள் சந்தியா (பட்டதாரி), கரோனா காலத்தில் அந்த கிராமத்தில் உள்ள 20 பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்துவருவதை அறிந்து, அந்த பெண்ணுக்கு ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

அத்துடன், சந்தியாவுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். தொடர்ந்து புதுப்பதி பழங்குடியின கிராமம், வாளையார் சோதனைச் சாவடி ஆகிய பகுதிகளிலும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT