பிரதிநிதித்துவப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

திருச்சியில் பெய்த திடீர் மழை; கோவில்பட்டியில் 41.20 மிமீ பதிவு

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு வரை பலத்த மழை பெய்தது.

வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை (ஜூன் 23) 4 மணியளவில் மழை லேசாக தொடங்கி, சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. இரவு 10 மணி வரை மழை பெய்ததால், வடிகால்கள், கழிவு நீர் சாக்கடைகள் மழையால் நிரம்பி வழிந்தன. இந்த மழை காரணமாக, திருச்சி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

திருச்சி மாவட்டத்தில் இன்று (ஜூன் 24) காலை நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் 41.20 மி.மீ. மழை பதிவாகியது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்:

தேவிமங்கலம் 34, திருச்சி நகரம் 32, திருச்சி ஜங்ஷன் 31, நந்தியாறு தலைப்பு 26.20, மருங்காபுரி 25.40, நவலூர் குட்டப்பட்டு 25, சமயபுரம் 24.20, பொன்மலை 20.80, திருச்சி விமான நிலையம் 19.70, புள்ளம்பாடி 15.60, கல்லக்குடி 10.20, துவாக்குடி, முசிறி தலா 10, மணப்பாறை 7.80, வாத்தலை அணைக்கட்டு, புலிவலம் தலா 7.

SCROLL FOR NEXT