பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காரைக்காலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர். 
ஒரு நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வீ.தமிழன்பன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் காரைக்காலில் இன்று (ஜூன் 11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி ஏற்பாட்டில், காரைக்கால் தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலைய வாயிலில் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கட்சியின மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் மோகனவேலு, மாநிலச் செயலாளர்கள் ஜெயசீலன், அருள் டொமினிக், மாநில மீனவர் காங்கிரஸ் செயலாளர் இ.தங்கவடிவேல், மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.கருணாநிதி, மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் அஞ்சப்பன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT